வரத்து குறைவால மீன் விலை கடுமையாக உயர்ந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய் பட்டணம், முட்டம் , குளச்சல் ஆகிய துறைமுகங்களில் இருந்து விசைப்படைகளில் ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்றனர். கடந்த ஒரு வார காலமாக கடலில் சூறைக்காற்று வீசியதால் மீனவர்கள் காரை திரும்பினர். ஆனால் மீனவர்களுக்கு போதுமான அளவில் மீன்கள் கிடைக்கவில்லை, இதனை அடுத்து குறைந்த அளவில் கிடைத்த மீன்களுக்கு கடுமையான கிராக்கி ஏற்பட்டுள்ளது.
கணவாய் மீன் கிலோ 400-ரூபாக்கும் ஆக்டோபஸ் கணவாய் மீன் 300-க்கும் விற்பனை விசைப்படகு மீனவர்கள் தொழிலை பாதியிலேயே கைவிட்டு கரை திரும்பிய நிலையில் கிளிமூக்கு மீன் கிலோ 150-ரூ கொழிசாளை மீன் கிலோ-30 ரூ க்கும் விலையுயர்ந்து விற்பனையாகிவருகிறது.வரத்து குறைவால் மீன்விலை உயர்ந்துள்ளதால்
வியபாரிகள் போட்டி போட்டு மீன்களை வாங்கிச் சென்றனர்.
Tags :



















