சின்ன சின்ன செய்தி தொகுப்பு...

by Editor / 23-11-2021 11:45:25am
சின்ன சின்ன செய்தி தொகுப்பு...

சேலம் கருங்கல்பட்டி பகுதியில்  நான்கு வீடுகள் சிலிண்டர் வெடித்து சரிந்ததுள்ளது.
இடிபாட்டில் சிக்கி உள்ள மூன்று பேர் மீட்கும் பணி கவனமாக நடக்கிறது. மீட்பு பணியில் ஈடுபட அரக்கோணத்திலிருந்து பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்க ஏற்பாடு செய்துள்ளோம்.சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் பேட்டி.

ஆந்திர மாநில தொடர் மழை காரணமாக பிச்சாட்டூர் அணையிலிருந்து ஆரணி ஆற்றில் வினாடிக்கு 1000 கனஅடியாக திறக்கப்பட்ட தண்ணீர் தற்போது 800 ஆயிரம் கன அடியாக குறைப்பு ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 1000 கனஅடியாக வந்து கொண்டு இருக்கிறது இதனால் ஆரணி ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.


தமிழ்நாட்டில் நவ.24, 25,26 கன மழைக்கு வாய்ப்பு. காரைக்கால், புதுச்சேரி, கேரளாவில் நவ.25 - 27ம் தேதி வரை அதி கன மழைக்கு வாய்ப்பு.--இந்திய வானிலை ஆய்வு மையம்.
அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு.இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை மற்றும் தெற்கு தமிழ்நாடு கடல் பகுதிகள் இடையே வரக்கூடும்.ஒரே மாதத்தில் 3வது முறையாக வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.

திருச்சி நவல்பட்டு சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதன் கொலை வழக்கில் கைதான மணிகண்டனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் - கீரனூர் நீதிபதி உத்தரவு.

தென்காசியில் வசித்து வரும் கடல் முருகன் என்பவரது மகள் சாருலதா என்ற 19 வயது கல்லூரி மாணவி செல்போனில் கேம் விளையாடியதை குடும்பத்தினர் கண்டித்ததால் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை.

 அறந்தாங்கி அருகே கோட்டைப்பட்டினம் நாட்டுப்படகு துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற மணி முத்து என்பவரது நாட்டு படகு காற்றின் காரணமாக கடலில் சாய்ந்ததால்  மணிமுத்து மாயமானார். மாயமான மீனவரை கடலோர காவல் படையினர் மற்றும் சக மீனவர்கள் தேடி வருகிறார்கள்.

ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் கைத்துப்பாக்கிகள் எடுத்துச் செல்லலாம்,
உயிருக்கு ஆபத்து என்கிறபோது துப்பாக்கிகளை பயன்படுத்த காவல்துறையினர் தயங்க கூடாது-டிஜிபி சைலேந்திர பாபு

கரூரில் மோட்டார் வாகன ஆய்வாளர் கனகராஜ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வேன்  பிடிபட்டது. டிரைவர் தப்பி ஓட்டம்.

தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் அருகே குவாரிகள் அமைக்கக் கூடாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதித்தநல்லூர், வல்லநாடு மலையடிவாரங்கள்,  சிவகளை சுற்று வட்டாரங்களில் அடுத்தடுத்து சரள் குவாரிகளை அமைத்து தமிழர் வரலாற்று ஆதாரங்களை நிரந்தரமாக அழித்து விடுகிறார்கள்.தொழில் துறை:அரசாணை (நிலை) எண் 295, நாள்: 03.11.20212021-2022 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிக்கைகுவாரிப் பணிகளில் இருந்து வரலாற்று சின்னங்கள், பழந்தமிழர் கல்வெட்டுகள், சமணப்படுகை மற்றும் தொல்பொருள் தளங்கள் பாதுகாக்கப்படும் என தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து டி.ஜி.பி லைலேந்திர பாபு ஆறுதல்; பூமிநாதனின் திருவுருவப் படத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி.

திருப்பதியில் பெய்த கனமழையால் ஏழுமலையானை தரிசிக்க டிக்கெட் முன்பதிவு செய்து, வர முடியாத பக்தர்கள், ஆன்லைனில் 6 மாதங்களுக்குள் வேறு தேதி மாற்றி தரிசனம் செய்ய தேவஸ்தான இணையதளத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


 

சின்ன சின்ன செய்தி தொகுப்பு...
 

Tags :

Share via