“பாலியல் கொடுமை நடப்பது தான் ஆன்மீக அரசியலா?” - நயினார் கேள்வி

தமிழகத்தில் ஆன்மீக ஆட்சி நடப்பதாக குன்றக்குடி, தருமபுரம், மயிலம் ஆதீனங்கள் கூறியிருந்தனர். அதற்கு, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறுகையில், “தமிழகத்தில் தினசரி பாலியல் வன்கொடுமை நடப்பது தான் ஆன்மீக அரசியலா?. நட்சத்திர விடுதிகளில் கொக்கைன் சப்ளை நடப்பதுதான் ஆன்மீக அரசியலா?. பாலியல் வன்கொடுமை குறித்து பேசுபவர்கள் மீது வழக்கு தொடுப்பதுதான் ஆன்மீக அரசியலா?” என அடுக்கடுக்காக கேள்விகளை முன்வைத்துள்ளார்.
Tags :