பாகிஸ்தான் எங்கள் இரண்டாம் தாயகம்... தலிபான் செய்தி தொடர்பாளர் அறிவிப்பு...

by Admin / 27-08-2021 03:33:05pm
பாகிஸ்தான் எங்கள் இரண்டாம் தாயகம்... தலிபான் செய்தி தொடர்பாளர் அறிவிப்பு...

பாகிஸ்தான், தங்களது இரண்டாம் தாயகம் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
 
பாகிஸ்தான், தங்களது 2ஆம் தாயகம் போன்றது என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர். செய்தியாளர்களைச் சந்தித்த தலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிகுல்லா முஜாகித், தலிபான்கள் அமைக்க விரும்பும் அரசு, இஸ்லாமிய மதத்தின் அடிப்படையில், அனைத்து ஆப்கானிஸ்தானியர்களும் பங்கு பெறுவதாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.

மேலும், தலிபான்கள் ஆப்கானிஸ்தானை பிடித்ததில், பாகிஸ்தானுக்கு எந்த பங்கும் இல்லை என்றும், இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளுடனும் தலிபான்கள் நல்லுறவு வைத்துக் கொள்ள விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 பாகிஸ்தானுடன் ஆப்கானிஸ்தான் எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ளதாகவும், மதம் என்று வரும் போது பாரம்பரியமாக இணைந்து விடுவதாகவும் கூறியுள்ள முஜாகித், பாகிஸ்தானுடனான உறவை மேலும் வலுப்படுத்த விரும்புவதாகவும், பாகிஸ்தான் தலிபான்களுக்கு 2ஆவது தாயகம் எனவும் கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo