சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சென்ற பக்தர் நீரில் அடித்துச் செல்லப்பட்டார்
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சென்ற பக்தர் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு கடந்த 7 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பிரதோஷத்திற்கு மலைப்பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக பக்தர்கள் செல்லும் மலைப்பாதையில் உள்ள நீர் ஓடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் அன்று பக்தர்கள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் அனுமதி மறுக்கப்பட்டது.
பின்னர் 8 ஆம் தேதி மலைப்பகுதியில் மழை இல்லாததாலும் நீர் ஓடை பகுதிகளில் நீர் வரத்து குறைவாக இருந்தாலும் கோவிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் அன்று மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பால கோவிலுக்கு சென்ற சுமார் 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கீழே இறங்க அனுமதி மறுக்கப்பட்டு கோவில் வளாகத்தில் பத்திரமாக தங்கவைக்கப் பட்டிருந்தனர்.
இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி அமாவாசை அன்று தொடர் மழையின் எதிரொலியாக பக்தர்கள் மீண்டும் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு. கோவில் வளாகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 200 மேற்பட்ட பக்தர்கள்நீரோடு இப்பகுதிகளில் கயிறுகள் கட்டி கைகளைப்பிடித்து பத்திரமாக கீழே தாணிப்பாறை அடிவார பகுதிக்கு இறங்கினார்.
இந்நிலையில் மாங்கனி ஓடை பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது துர்நாற்றம் வீசியுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் வனத்துறையினர் தேடிய பொழுது அழுகிய நிலையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்றை தலையில் பலத்த காயத்துடன் அடிபட்டு மாங்கனி நீரோடை பகுதியில் கண்டுள்ளனர்.
Tags :