மத்திய அரசு நிதி வழங்கவில்லை - தங்கம் தென்னரசு
2014ம் ஆண்டு முதல் 2023 மார்ச் வரை தமிழ்நாட்டில் இருந்து ரூ.6.23 லட்சம் கோடி நேரடி வரி வருவாயாக மத்திய அரசு பெற்றுள்ளது. ஆனால், மறைமுக வரிவருவாய் குறித்து எந்த தரவுகளையும் அவர்கள் பகிர்ந்து கொள்ளவில்லை என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். இதே உத்திரபிரதேச அரசு மத்திய அரசிடம் ரூ.2.23 லட்சம் கோடி குடுத்து ரூ.15.35 லட்சம் கோடி பெற்றுள்ளது. மிக்ஜாம் புயல், தென்மாவட்ட வெள்ளம் ஆகியவற்றுக்காக கோரப்பட்ட நிவாரண நிதியை ஒன்றிய அரசு தற்போது வரை வழங்கவில்லை. மாநில அரசின் நிதியிலே, இதுவரை ரூ.2027 கோடி நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்
Tags :













.jpg)





