டான்டீ தொழிலாளர்களுக்கு 20சதவீதம் போனஸ் வழங்காவிட்டால் போராட்டம்.
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டக்கழக (டான்டீ சின்கோனா) தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டுக்கான தீபாவளி போனஸ் இதுவரை வழங்கப்படவில்லை இந்நிலையில் தொழிலாளர்கள் கடந்த சில தினங்களாக அலுவலகம் முன்பு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் காலம் தாழ்த்தாமல் உடனடியாக தமிழக அரசு 20 சதவீதம் போனஸ் வழங்கா விட்டால் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபடுவதாக இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அறிவித்துள்ளனர் விடுதலை சிறுத்தைகள் தொழிற்சங்க தலைவர் வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்
Tags : டான்டீ தொழிலாளர்களுக்கு 20சதவீதம் போனஸ் வழங்காவிட்டால் போராட்டம் தொடரும்



















