அரசு பேருந்து மோதி நிருபர் பலி

மதுரை மாவட்டம் மேலூர் பகுதி தினமணி செய்தியாளராக பணியாற்றி வந்த தர்மராஜன் (58) என்பவர் இன்று (மார்ச். 13) மதியம் மேலூர் சிவகங்கை சாலையில் ஆட்டுக்குளம் அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த அரசு பேருந்து மோதியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :