தமிழ்நாட்டில் மீண்டும் பால் விலை உயர்வு

தமிழ்நாட்டில், தனியார் பால் விற்பனை விலை மீண்டும் உயர்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க மாநில தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "முன்னணி தனியார் பால் நிறுவனமான ஹட்சன் நிறுவனம் நாளை (மார்ச்.14) முதல் ஆரோக்யா பாலுக்கான விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்படுகிறது. மேலும், தயிர் கிலோவுக்கு ரூ.3 உயர்த்தப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :