தீபாவளி - ரேஷன் அட்டைதாரர்களுக்கு நற்செய்தி
ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளி சிறப்பு அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார். பிரதமர் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் இலவச உணவு தானிய விநியோகம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு 80 கோடி பயனாளிகளுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் நாளை முதல் இலவச பொருட்களை வாங்கி கொள்ளலாம். அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை இருப்பு வைக்கவும் உணவுப்பொருள் வழங்கல் துறை உத்தரவிட்டிருந்தது.
Tags :



















