திருடனை அடித்துக்கொன்ற கிராம மக்கள்

by Staff / 02-01-2023 01:48:12pm
திருடனை அடித்துக்கொன்ற கிராம மக்கள்

ஜார்கண்ட் மாநிலம் கிரிடியில் வினோத் சவுத்ரி என்ற நபர், பிரலால் என்ற நபரின் மாட்டு கொட்டகைக்குள் சென்று ஆடு, மாடுகளை திருட முயன்றுள்ளார். அப்போது கால்நடைகள் சத்தம் போட, அதைக் கேட்டு எழுந்த பிரலால், உடனடியாக வினோத்தை கம்பினால் தாக்கினார். பலத்த காயத்துடன் வினோத் ஓடிக்கொண்டிருந்தபோது, கிராம மக்கள் கூட்டமாக வந்து அவரைத் கடுமையாக தாக்கினர். இதனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo