தொழிலாளி கொலை வழக்கில் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

by Admin / 22-01-2022 02:37:15pm
தொழிலாளி கொலை வழக்கில் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

பெரியகுளம் அருகே தொழிலாளி கொலை வழக்கில், சித்தி உள்பட 4 பேரை காவல்துறையினா்  கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள எ.காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் செந்தில். இவர், நேற்று முன்தினம் அங்குள்ள குப்பைத்தொட்டியில் பாதி உடல் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரியகுளம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சொத்து தகராறில் செந்திலின் சித்தி 4 பேரை கொண்டு அவரை கொலை செய்ததாக விசாரணையில் தொியவந்தது.

இதையெடுத்து, ரத்தினகிரி உட்பட 4 பேரை காவல்துறையினா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.


 

 

Tags :

Share via

More stories