IAS அதிகாரி வீட்டில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்

ஒடிசா மாநிலத்தில், சார் ஆட்சியராக பணியாற்றி வரும் திமான் சக்மா என்பவர் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து ரூ.10 லட்சத்தை லஞ்சமாக பெறும்போது பிடிபட்டார். தொடர்ந்து, அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.50 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தது தெரியவந்தது. உடனடியாக அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாரணையில், பல்வேறு தொழிலதிபர்களை மிரட்டி ஐஏஎஸ் அதிகாரி திமான் சக்மா, பல லட்சங்களை லஞ்சமாக பெற்று வந்தது தெரியவந்துள்ளது.
Tags :