தங்கள் மீது பழி சுமத்துவதாக நீதிமன்றத்தில் RCB மனு

பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரத்தில் RCB மீது பதிவு செய்யப்பட்டுள்ள FIR-ஐ ரத்து செய்ய வேண்டும் என கர்நாடக உயர் நீதிமன்றத்தில் RCB தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு குறைப்பாட்டை மறைக்க தங்கள் மீது பழி சுமத்துவதாக RCB நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஐபிஎல் 18ஆவது சீசன் கோப்பையை பெங்களூரு அணி கைப்பற்றியது. இதனை கொண்டாடும் விதமாக சின்னசாமி மைதானத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர்.
Tags :