மனைவியை கொன்று இரண்டு நாட்கள் உடலுடன் சுற்றித் திரிந்த நிலையில் எரித்து கொன்றதாக கணவர் மற்றும் கணவரின் தம்பி கைது.

by Editor / 13-02-2025 10:03:23am
 மனைவியை கொன்று இரண்டு நாட்கள் உடலுடன் சுற்றித் திரிந்த நிலையில்  எரித்து கொன்றதாக கணவர் மற்றும் கணவரின் தம்பி கைது.

தென்காசியில் பெண்ணை கொலை செய்து எரித்த சம்பவத்தில் திடுக்கிடும்  தகவல் ---- மனைவியை கொன்று இரண்டு நாட்கள் உடலுடன் சுற்றித் திரிந்த நிலையில் பின்னர் எரித்து கொன்றதாக கணவர் மற்றும் கணவரின் தம்பி கைது.


தென்காசி மாவட்டம் கொல்லம் - மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகில் இலத்தூர் பகுதியில் உள்ள மதுநாத பெரி சுமார் 500 மீட்டர் தொலைவில் குளம் அமைந்துள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத அந்த குளத்து பகுதிக்கு அருகே சடலம் ஒன்று முழுவதுமாக எரிந்த நிலையில் கிடந்ததை செவ்வாய் அன்று காலை அப்பகுதிக்குச் சென்ற நபர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து இலத்தூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தன் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று விசாரணையை மேற்கொண்டனர். மேலும் சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் நேரடியாக வந்து விசாரணை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இதில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட உடலில் கிடந்த மெட்டி மற்றும் உடல் முழுவதுமாக எரிந்த நிலையில் இடது கை மட்டும் எரியாத நிலையில் மீட்க்கப்பட்ட உடல் 30வயது மதிக்கதக்க பெண்ணின் சடலம் என்பது தெரியவந்தது. இந்த நிலையில் உடலுக்கு அருகில் மது பாட்டில்கள் மற்றும் அருகில் கிடந்த தடயங்களை சேகரித்து காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். 

இந்த நிலையில் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது  இறந்த பெண்ணின் உடல் மற்றும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் சிவகாசி பாரதி நகர் பகுதியை சேர்ந்த கமலி என்ற பெண்ணை அவரது கணவர் ஜான் கில்பர்ட் பிரேம் ராஜ் குடும்பத் தகராறில்  கம்பியால் அடித்து ஞாயிற்றுக்கிழமை அன்று கொன்றுவிட்டு இரண்டு நாட்களாக உடம்பை தனது நண்பரின் காரில் வைத்து குற்றாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்துள்ளார்.

கடைசியில் இலத்தூர் குளத்தில் ஆள் நடமாட்டம் இல்லாததை தெரிந்து கொண்டு அங்கு வைத்து கமலி உடலை தீ வைத்து எரித்துள்ளனர். இதற்கு உடந்தையாக இருந்த ஜான் கில்பர்ட் பிரேம்ராஜ் சகோதரர் தங்க திருப்பதி ஆகியோரும் தற்போது காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கமலியும்,ஜான் கில்பர்ட், வேவ் வேறு பிரிவை சார்ந்தவர்கள் காதல் திருமணம் செய்துகொண்ட இவரகளுக்கு 5வயதில்  பெண்குழந்தை ஓன்று உள்ளது.இந்தநிலையில் கமலி வேறுஒருவருடன் பழகியுள்ளார்.இதுகுறித்து கணவனுக்கு தெரியவரவே தொடர்ந்து தகராறு இருந்துவந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மீண்டும் கணவன் மனைவிக்கிடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.அன்று நடந்த மோதலில் கணவனை மனைவி கமலி தாக்கியதாக கூறப்ப்டுகிறது.இதனால் கோபமடைந்த கணவன் மனைவியை இரும்பு கம்பியால் தாக்கியதில் அவர் பலியானதாக கூறப்ப்டுகிறது.
 மனைவியை கொன்று இரண்டு நாட்களாக உடலுடன் சுற்றி திரிந்து பின்னர் அவரை தீ வைத்து எரித்த சம்பவத்தில் கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

 

Tags : மனைவியை கொன்று இரண்டு நாட்கள் உடலுடன் சுற்றித் திரிந்த நிலையில் எரித்து கொன்றதாக கணவர் மற்றும் கணவரின் தம்பி கைது.

Share via