ஆட்டோ மோதி இளைஞர் பலி.

by Staff / 04-05-2023 02:23:35pm
ஆட்டோ மோதி இளைஞர் பலி.

திருத்தணியை  அடுத்த கீழ்முருக்கம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பாபு மகன் தினேஷ், 25. இவர், நேற்று தன் அண்ணன் சதீஷுன் 2 வயது குழந்தைக்கு  காய்ச்சல் காரணமாக, தன் அண்ணி லாவண்யா மற்றும் குழந்தையுடன் திருத்தணி அரசு  மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், தரணிவராகபுரம் பஸ் நிறுத்தம் அருகே, சரக்கு ஆட்டோ ஒன்று எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீதுமோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்த தினேஷ், அவரது அண்ணி லாவண்யா, குழந்தை பிலிப்ஸ் ஆகிய மூவரும் பலத்த காயம் அடைந்தனர். அவ்வழியாக சென்றவர்கள் மூவரையும் மீட்டு, '108' ஆம்புலன்ஸ் வாயிலாக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் தினேஷ் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். லாவண்யா, குழந்தை பிலிப்ஸ் ஆகிய இருவரும் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

Tags :

Share via