திருச்செந்தூர் கடல் உள்வாங்கியது.

by Editor / 09-04-2023 12:54:26pm
திருச்செந்தூர் கடல் உள்வாங்கியது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவில் கடல் வழக்கத்தை திடீரென 200 மீட்டர் உள்வாங்கி காணப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவில் கடற்கரையில் அமைந்துள்ளதால் இந்த கோயிலுக்கு தனி சிறப்பு உள்ளது. மேலும் இந்த கோவிலுக்கு  வரக்கூடிய பக்தர்கள் அனைவரும் கடலில் புனித நீராடிய பின்னரே கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் பக்தர்கள் நீராட கூடிய இடத்திற்கும் அய்யா வைகுண்டர்  அவதாரப்பதி அமைந்திருக்கக் கூடிய இடத்திற்கும் நடுவே சுமார் 500 மீட்டர் இடைவெளியில்  200 அடி நீளம் வரை கடல் உள்வாங்கி காணப்படுகிறது.
மேலும் இந்த கடலானது பௌர்ணமி அமாவாசை  உள்ளிட்ட நாட்களில் உள்வாங்கியும், வெளியில் வருவதும்   வழக்கமான நிகழ்வாக  உள்ளது.இந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி பௌர்ணமி  முடிந்த பின்பு இன்று வரை கடல் சற்று உள்வாங்கி காணப்பட்ட நிலையில்  இன்று வழக்கத்தை விட அதிகமாக சுமார் கடற்கரையில் இருந்து 200 அடி தூரம் வரை உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் கடலுக்குள் இருக்கக்கூடிய பாறைகள் அனைத்தும் வெளியில் தெரிகிறது. அவற்றின் மீது ஏறி நின்று கோவிலுக்கு வந்திருக்கக்கூடிய பக்தர்கள் செல்பி போட்டோ எடுத்து வருகின்றனர். மேலும் வழக்கத்தை விட அதிகமாக கடல் உள்வாங்கி காணப்படுவதால் பக்தர்கள் மத்தியில் சற்று பரபரப்பு ஏற்பட்டாலும் பக்தர்கள் எந்தவிதமான அச்சமும் இன்றி கடலில் புனித நீராடி வருகின்றனர்.

 

Tags :

Share via