உம்மன் சாண்டி மறைவு கேரள அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் மறைவுக்கு, முதலமைச்சர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து இரங்கல் பதிவு வெளியிட்டுள்ள அவர், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி ஒரு திறமையான நிர்வாகி. மக்கள் பணியில் நெருக்கமாக ஈடுபட்டவர். சாண்டியும் தானும் ஒரே ஆண்டில் சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றும், அதே நேரத்தில் மாணவர் பருவத்தில் இருந்தே அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்டவர்கள் என்றும் விஜயன் பகிர்ந்து கொண்டார். கேரள முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி (செவ்வாய்க்கிழமை)இன்று அதிகாலை பெங்களூருவில் காலமானார்.அவரது உடல் கேரளமாநிலத்திற்கு எடுத்து செல்லப்ப்டுள்ளதாகவும்,அங்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கபப்டா உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இன்று கேரள அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு கேரள அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
Tags :