திடீர் தீ விபத்து; பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

by Staff / 21-10-2023 02:07:04pm
திடீர் தீ விபத்து; பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

 திண்டுக்கல் ஸ்டாலின் காட்டேஜுக்குள் இருக்கும் நியூ அஞ்சலி ஸ்வீட்ஸ் கடை நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து சேதமடைந்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு தயாரித்து வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள இனிப்பு மற்றும் கார வகைகள் அனைத்தும் எரிந்து நாசமாகின. ஏராளமான எண்ணெய் கடன்களும் தீயில் கொளுந்து விட்டு எரிந்தன. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை போராடி அணைத்தனர். சுமார் ஒரு மணி நேரம் பிடித்து எரிந்த தீயால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. குடிகாரர்கள் யாரும் போதையில் தீ வைத்தார்களா அல்லது காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். மேலும் நகர் வடக்கு போலீசார் அங்கு முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

 

Tags :

Share via