அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு  நலத்திட்ட உதவி: முதல்வர்  வழங்கினார்

by Editor / 30-07-2021 03:51:07pm
 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு  நலத்திட்ட உதவி: முதல்வர்  வழங்கினார்

 


தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில் 50 ஆயிரம்  அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொடங்கி வைத்தார். 


சென்னை ராயப்பேட்டையில் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில் 50 ஆயிரம்  அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

50 ஆயிரம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில், 34 கோடியே 78 லட்சத்து 88 ஆயிரத்து 950 ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 50ஆயிரம் தொழிலாளர்களுக்கு 10 கோடியே 69 லட்சம் திருமண உதவித் தொகை, மகப்பேறு, கல்வி, கண்கண்ணாடி, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஆகியவற்றிற்கான நலத்திட்ட உதவிகள், ஓய்வூதிய நிலுவைத் தொகை 24 கோடி ரூபாய் வழங்கபட்டது.


இந்த விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொன். குமார், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறைச் செயலாளர், தொழிலாளர் ஆணையர், முதன்மைச் செயலாளர், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். 


 

 

Tags :

Share via