அச்சுறுத்தும் கக்குவான் இருமல்: 54 குழந்தைகள் இறப்பு

by Staff / 12-04-2024 11:22:27am
அச்சுறுத்தும் கக்குவான் இருமல்: 54 குழந்தைகள் இறப்பு

கக்குவான் இருமல்(Whooping Cough) உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. நெதர்லாந்து, பிலிப்பைன்ஸ், சீனா மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளில் இந்த பாதிப்பினால் அதிக குழந்தைகள் இறந்துள்ளனர். பிலிப்பைன்ஸில் மட்டும் கடந்த 3 மாதங்களில் 54 குழந்தைகள் கக்குவான் இருமலால் உயிரிழந்துள்ளனர். மேலும் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவில் வேகமாக பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் 32 ஆயிரம் பேர் இந்த இருமலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via