முன்விரோதத்தில் அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பியை போலீசார் கைது செய்தனர்.

by Staff / 23-12-2022 03:29:57pm
முன்விரோதத்தில் அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பியை போலீசார் கைது செய்தனர்.

விளாத்திகுளம் அருகே முன்விரோதத்தில் அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பியை போலீசார் கைது செய்தனர்.  இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள விருசம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி மகன் ராஜேந்திரன் (47), இவரது தம்பி கருப்பசாமி (44). இருவரும் அடுத்தடுத்த வீட்டில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் ராஜேந்திரன் வீட்டின் மின் இணைப்பிற்கான மெயின் சுவிட்சை கருப்பசாமி ஆஃப் செய்து விட்டதாக கூறப்படுகிறது.  

இதனை தட்டிக் கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கருப்பசாமி, ராஜேந்திரனை சரமாரியாக அரிவாளால் வெட்டினாராம். இதில் பலத்த காயமடைந்த ராஜேந்திரன் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தேவராஜ் வழக்குப் பதிந்து, கருப்பசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
 

 

Tags :

Share via

More stories