சிஆர்பிஎஃப் தேர்வு தமிழில் கிடையாது
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சிஆர்பிஎஃப்) உள்ள 9,212 கலிப்பாணிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இத்தேர்வை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் நடத்த வலியுறுத்தி, மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், சிஆர்பிஎஃப் தேர்வை இந்தி, ஆங்கிலம் தவிர்த்து வேறு மொழிகளில் நடத்தும் திட்டம் இல்லை என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags :