பெரியார் பேருந்து நிலையம் அருகே கார் வாகன காப்பகம்
பெரியார் பேருந்து நிலையம் அருகே கார் வாகன காப்பகம்
எல்லீஸ் நகர் ரயில்வே பாலத்திற்கும் பாண்டி பஜாருக்கும் இடையே பழைய ரயில்வே காலனியில் ரயில்வே ஊழியர்கள் குடியிருந்து வந்தனர். தற்பொழுது இந்த ரயில்வே காலனி வீடுகள் பழையதாகிவிட்டதால் அவை பயன்பாடு இல்லாமல் இருக்கின்றன. எனவே அந்தப் பகுதியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு பயன்படும் வகையில் கார் வாகன காப்பகமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த வாகன காப்பகத்திற்கு ஆர்.எம்.எஸ். ரோடு வழியாக செல்லலாம். 1100 சதுர மீட்டர் பரப்புள்ள வாகன காப்பகத்தை ஆய்வுசெய்த திங்கட்கிழமை அன்று (13.12.2021) தெற்கு ரயில்வே முதன்மை வர்த்தக மேலாளர் ரவி வல்லூரி இந்த முயற்சி மதுரை நகரில் வாகன நெரிசலை குறைக்க உதவும் என தெரிவித்தார்.
Tags :