இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன ரெட்டி ஆதரிக்கும் முகமாக தமிழக முதலமைச்சர் மு..க .ஸ்டாலின் உரை நிகழ்த்தினார்.

by Admin / 24-08-2025 11:53:28pm
இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன ரெட்டி ஆதரிக்கும் முகமாக தமிழக முதலமைச்சர் மு..க .ஸ்டாலின்  உரை நிகழ்த்தினார்.

 குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான ஆதரவு-

சென்னை டி நகர் உள்ள நட்சத்திர விடுதியில் நடந்த இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன ரெட்டி ஆதரிக்கும் முகமாக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உரை நிகழ்த்தினார்.

உங்களைத்தான் குடியரசுத் தலைவர்வேட்ப்பாளரா ஏத்துக்கிட்டு இருக்காங்க. தென் மாநிலத்தைச் சார்ந்த இவருடைய ப்ரோபைல் எல்லோரும் கவனிக்கணும் .உஸ்மானியா யூனிவர்சிட்டியில் சட்டம் பயின்று 1971ல வழக்கறிஞர் பிராக்டிஸ் பண்ண தொடங்கினர் .ஆந்திர மாநில அரசு வழக்கறிஞர், ஒன்றிய அரசோட கூடுதல் நிலை ஆலோசகர், ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தினுடைய நீதிபதி, கவுகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியா முன்னேறி மாண்புமிகு உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்திருக்கிறார். கிட்டத்தட்ட 60 ஆண்டு கால வாழ்வை சட்டம், நீதி ஆகியவற்றிற்காக அர்ப்பணித்து இருக்கிறார். இவர் நீதியரசர் பணியாற்றிய காலத்துல நேர்மையாஇருந்தவர்..

 இவர் ஏன் இன்னைக்கு தேவைப்படுகிறார் என்றால், பாஜகவின் அரசியல் என்ற சட்டத்தை சிதைக்க நினைக்கிற இந்த நேரத்தில், அரசியல் சட்டத்தை பாதுகாத்த நீதி அரசர் ஆன இவர், அதை பாதுகாக்க பொறுப்புக்கு தேவைப்படுகிறார் .அதுக்கு ஒரு எடுத்துக்காட்டு தான் புதிய தேசிய கல்விக் கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் நடத்துன மாநாட்டில் அவர் பேசுனது, சுருக்கமாக. சொல்லனும்னா.. இது திருவள்ளுவர், பாரதியா,ர் பெரியார் ,கலைஞர்  மண். போராட்டக் குணத்தை எப்போதும் விடுவதில்லை என்று சொல்லி புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக போராடுவது நம்முடைய கடமை. இது இந்த தேசத்திற்கு நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான பணி. இவர்கள் கொண்டு வர நினைக்கிற ரகசிய  கல்விகொள்கை மனித மாண்புகளுக்கு எதிரானது .நான். எனது .என்னுடையது என்ற கலாச்சாரத்தை மட்டுமே இது உருவாக்கும். பன்முக தன்மையோ ,கல்வியின் ஜனநாயக பரவலையோ இது உருவாக்காது என்று தன்னுடைய கருத்துக்களை பதிவு செஞ்சு, தமிழ்நாட்டோட உணர்வுகளை உறுதியோடு வெளிப்படுத்தினார்  இதைவிட பெரிய காரணம் தேவையா.. ஆனால், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசரை மாண்புமிகு உள்துறை அமைச்சர் தன்னுடைய பொறுப்பை மறந்து ,ஒரு முன்னாள் நீதி அரசரை பத்தி தப்பாகபேசி இருக்கிறார். அவங்களால தீவிரவாதத்தை ஒழிக்க முடியல. அந்த கையாலாகாத நிலையை மறைக்க, நீதியரசர் மேல பழி போட்டு தப்பிக்க பாக்குறாங்க, ஒன்றைபாஜகசெஞ்சுகிட்டு இருக்கு .அரசியல் எதிரிகளை பழிவாங்க புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்திக் கொண்டு இருக்கிறது .இந்த சூழலில், இந்தியாவோட அடிப்படை கொள்கைகளான மதச்சார்பின்மை, கூட்டாட்சித்துவம், சமூகநீதி, வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட ஒருத்தரா இன்றைக்கு அவர் நமக்கு கிடைத்திருக்கிறார். நாம முன்னெடுக்கக்கூடிய கடமை. ஆனால், மக்களுக்கும் எதிரான அத்தனை நடவடிக்கைகளையும் செஞ்சிட்டு தமிழர் என்ற முகமூடி அணிந்து ஆதரவு கேட்கிறார்கள். தனிமனிதர்களை விட தத்துவங்கள் தான் அரசியலை வழி நடத்தும் மக்களுக்கு சட்டரீதியாகவும் மனித உரிமைகளுக்காகவும் போராட வாதாடென தீர்ப்பு வழங்கிட மாண்புமிகு சுதர்சன் ரெட்டியவர்கள், இந்திய ஜனநாயகத்தை காக்க, நாடாளுமன்றமரபு களை காக்க ,மக்களாட்சியை காக்க அரசியலமைக்காக குடியரசு துணைத் தலைவரா வெற்றி பெற்று வரணும்னு வாழ்த்தி விடைபெறுகிறேன் .நன்றி ,வணக்கம்.

 

Tags :

Share via