ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்த பெண்-பணம் பறிக்கும் நோக்கில் செயல்படுவதாக நிலத்தின் உரிமையாளர் குற்றச்சாட்டு..
தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்றைய தினம் இடப்பிரச்சினை காரணமாக கீழப்பாவூர் பகுதியை சேர்ந்த ராஜசரஸ்வதி என்ற பெண் அதிகாரிகள் முன்னிலையில் மண்ணெண்ணையை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் தொடர்பாக தற்போது போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அந்த பெண் தன்னுடைய நிலத்தை கடையம் பகுதியை சேர்ந்த பொன்னுத்துரை என்பவர் ஆக்கிரமிப்பு செய்து கொண்டதாக கூறிய நிலையில், அதற்கு தற்போது தொழிலதிபரான பொன்னுத்துரை மறுப்பு தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, கடந்த 15 வருடங்களுக்கு முன்பு கேரளாவை சேர்ந்த நபரிடம் இருந்து இந்த நிலத்தை தான் வாங்கியதாகவும், அப்போதெல்லாம் விட்டுவிட்டு தான் அதில் விவசாயம் செய்து வரும் நிலையில் தன்னுடைய நிலத்தை ராஜசரஸ்வதி மற்றும் அவரது கணவர் முப்புடாதி ஆகிய இருவரும் போலி பத்திரம்பதிவு செய்து தன்னுடைய நிலத்தை அவர்கள் நிலம் எனக்கூறி பணம் பறிக்கும் நோக்கில் இது போன்ற மோசடியில் ஈடுபட்டு வரும் நிலையில், நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்குகளில் தங்கள் பக்கம் தீர்ப்பு வந்த நிலையிலும், ஏதாவது செய்து தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இது போன்ற செயல்பாடுகளில் ராஜசரஸ்வதி மற்றும் அவரது கணவர் ஈடுபட்டு வருவதாக பொன்னுத்துரை தெரிவித்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் கொடுக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags : ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்த பெண்-பணம் பறிக்கும் நோக்கில் செயல்படுவதாக நிலத்தின் உரிமையாளர் குற்றச்சாட்டு..



















