தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

by Admin / 24-03-2026 10:24:13pm
 தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

 இன்று அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான தொகுதி பொங்கிட்டு ஒப்பந்தத்தில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு க ஸ்டாலின் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் கையெழுத்திட்டனர். இக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரசுக்கு 28 இடங்களும் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்திற்கு பத்து தொகுதிகளும் விடுதலை சிறுத்தை கட்சிக்கு எட்டு தொகுதிகளும் சி .பி. ஐ சி.பி.எம் கட்சிகளுக்கு பல ஐந்து தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.கமலஹாசனின் மக்கள் நீதி மையத்திற்கு இரண்டு தொகுதிகள் கொடுக்கப்பட உள்ளதாக பேசப்பட்ட நிலையில், தாங்கள் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கமல்ஹாசன் அறிவித்ததை அடுத்து கிட்டதட்ட தொகுதி உடன்பாடு முடிவானது.திமுக கூட்டணியில் நிலவி வந்த தொகுதி உடன்பாட்டு இழுப்பறி ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.

 

Tags :

Share via
Logo