9-12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க முடிவு
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை குறைந்ததை அடுத்து பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் வரும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி கர்நாடக மாநிலத்தில் பள்ளிகளைத் திறக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.இது குறித்து பெங்களூரில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை செய்தியாளர்களிடம் கூறியதாவது:- மாநிலத்தில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 2 சதவீதத்திற்கும் கீழே உள்ள மாவட்டங்களில், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி ஆசிரியர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வரும் பெற்றோர்களும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். மாநிலத்திற்கு கொரோனா தடுப்பூசி அதிகளவில் வழங்கும்படி டெல்லியில் நாளை மத்திய அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளேன்.மாநிலத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் எல்லைகளில் உள்ள மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
Tags :