செவிலியராக பணியாற்றும் மனைவியை கொலை செய்து பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்த கணவன்-போலீசில் சரண்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றும் அய்யம்மாள் என்பவர் பணி முடிந்து பாளை இரட்சண்ய சேனை அலுவலகம் பின்புறம் வழியாக அண்ணாநகரில் உள்ள தனது வீட்டிற்கு நடந்து செல்லும் வழியில் அவரது கணவர் பாலசுப்பிரமணியன் என்ற இப்ராஹிமால் குத்தி கொலை செய்யப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரித்து கொலைசெய்யப்பட்டார்.
பாளை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனை போலீசார் வழக்குபதிவு செய்து கணவரை தேடிவந்தநிலையில் கணவர் பாலசுப்பிரமணியன் என்ற இப்ராஹிம் கோவில்பட்டி கிழக்கு காவல்நிலையத்தில் சரண்அடைந்துள்ளார்.கொலைக்கான காரணம் தெரியவில்லை.
Tags :