by Editor /
07-07-2023
09:32:35am
கோவை சரக டிஐஜி விஜயகுமார் மரணத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்று காலை தனது வீட்டில் அவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர், 'டிஐஜி விஜயகுமார் மரணம் அடைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். தனது பணிக்காலத்தில் பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றி தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்தவர். டிஐஜி விஜயகுமாரின் குடும்பத்தாருக்கும், காவல்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்' என கூறியுள்ளார்.
Tags :
Share via