தமிழ் திரையில் சாதனை படைத்த கவி பேரரசு வைரமுத்து 

by Editor / 24-07-2021 05:00:43pm
தமிழ் திரையில் சாதனை படைத்த கவி பேரரசு வைரமுத்து 

ஜூலை 13 பிறந்த நாள் 

வைரமுத்து (ஜூ லை 13, 1953), புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் மற்றும் கவிஞர் ஆவார். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார். நிழல்கள் (1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் சனவரி 2009 வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார். முன்பு இளையராஜாவுடனும், பின்னர் ஏ.ஆர். ரகுமானுடனும் இவர் இணைந்து வழங்கியப் பாடல்கள் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன.


தமிழ்நாடு மாநிலம் தேனி மாவட்டம், பெரியகுளம் அருகில் உள்ள வடுகபட்டியில் ராமசாமித்தேவர் - அங்கம்மாள் ஆகியோருக்கு மகனாக விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றார். 1980இல் "நிழல்கள்" திரைப்படத்தில் "இது ஒரு பொன்மாலைப் பொழுது.." எனத் தொடங்கும் பாடலை முதன் முதலில் இயற்றினார். இவருடைய மனைவியின் பெயர் பொன்மணி. இவருக்கு மதன் கார்க்கி, கபிலன் என இரு மகன்கள் உள்ளனர்.


கவிதைத் தொகுப்புகள்
வைகறை மேகங்கள்
திருத்தி எழுதிய தீர்ப்புகள்
இன்னொரு தேசியகீதம்
எனது பழைய பனையோலைகள்
கவிராஜன் கதை
இரத்த தானம்
இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல
தமிழுக்கு நிறமுண்டு
பெய்யெனப் பெய்யும் ம‌ழை
"எல்லா நதிகளிலும் எங்கள் ஓடங்கள்"
கொடி மரத்தின் வேர்கள்
தன்வரலாறு
இதுவரை நான்
விருது பெற்ற பாடல்கள்

அனைத்துப் பாடல்களுக்கும் (திரைப்படம்: முதல் மரியாதை) - 1985.
சின்னச்சின்ன ஆசை (திரைப்படம்: ரோஜா) - 1992.
போறாளே பொன்னுத்தாயி (திரைப்படம்: கருத்தம்மா), உயிரும் நீயே (திரைப்படம்: பவித்ரா) - 1994
முதன் முறை கிள்ளிப் பார்த்தேன் (திரைப்படம்: சங்கமம்) - 1999.
நெஞ்சில் ஜில் ஜில் ஜில் (திரைப்படம்: கன்னத்தில் முத்தமிட்டால்) - 2002.
கள்ளிக்காட்டில் பிறந்த தாயே (திரைப்படம்: தென்மேற்கு பருவக்காற்று) - 2010.
எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று (திரைப்படம்: தர்மதுரை) - 2016

 

Tags :

Share via