தெற்கு சைபீரியாவில் பயங்கர நிலநடுக்கம்

by Staff / 15-02-2025 04:44:40pm
தெற்கு சைபீரியாவில் பயங்கர நிலநடுக்கம்

ரஷ்யாவின் தெற்கு சைபீரியாவில் உள்ள அல்டார் குடியரசு பகுதியில், இன்று காலை 8.48 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி இருப்பதாக ரஷிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் சில இடங்களில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், சேதங்களை சரி செய்யும் பணி நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via