திருப்பதியைச் சேர்ந்த பெண்ணை இந்து முறைப்படி கரம்பிடித்த அமெரிக்க நாட்டு இளைஞர்.

by Editor / 06-08-2022 01:22:39pm
திருப்பதியைச் சேர்ந்த பெண்ணை இந்து முறைப்படி கரம்பிடித்த அமெரிக்க நாட்டு இளைஞர்.


அமெரிக்காவை சேர்ந்த நபர்  ஒருவர் திருப்பதியை சேர்ந்த பெண்ணை இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். திருப்பதியைச் சேர்ந்த ஹர்ஷவி  என்ற பெண் பி டெக் முடித்து அமெரிக்காவில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.அங்கு  பொதுமேலாளராக  பணியாற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த டோமியின் பிராங்க் என்ற நபருடன் ஹர்ஷவிக்கு  காதல் ஏற்பட்ட நிலையில் அமெரிக்காவில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் மாப்பிள்ளை டோமி இந்தியாவில் இந்து முறைப்படி திருமணத்தை நடத்த விரும்பியதால் இவர்களது திருமணம் திருப்பதியில் இருவீட்டாரின் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

 

Tags :

Share via

More stories