"அறுவடைத் திருநாள்" -ஓணம் பண்டிகை

by Writer / 20-08-2021 04:58:35pm


பாரம்பரியமிக்க சிறப்பு திருவிழாவாக கேரளா மற்றும் தென்தமிழகத்தில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை  (ஆக.,21) கொண்டாடப்படுகிறது.
ஓணம் விழா  பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும்.கொல்லவர்ஷம் என்ற மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் விழா கொண்டாடப்படுகிறது. பருவ மழைக் காலம் முடிந்ததும் எங்கும் பசுமையும் ஈரமும் நிறைந்திருக்கும் கேரளாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக ஓணம் கொண்டாடப்படுகிறது.

கேரள மக்களால் சாதி, மத வேறுபாடின்றி கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். இதைக் கேரளாவின் "அறுவடைத் திருநாள்" என்றும் அழைப்பர். மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் துவங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்கள் ஓணமாகக் கொண்டாடப்படுகிறது.
ஓணம் ஓராயிரம் ஆண்டுகளாகக் கேரளாவில் கொண்டாடப்பட்டு வரும் ஒரு முக்கியமான பண்டிகையென (கி.பி 861 தேதியிட்டுக் கிடைத்த தாமிரத்தகட்டில்) ஓணம் பண்டிகை பற்றிப் பொறிக்கப்பட்டுள்ளது. ஓணம் திருநாள் கொண்டாடப்படும் 10 நாட்களும் மக்கள் அதிகாலையிலே எழுந்து குளித்து வழிபாட்டில் ஈடுபடுவர்.
கசவு என்று சொல்லக்கூடிய சுத்தமான வெண்ணிற ஆடை உடுத்துவர். வீட்டுப் பெண்கள் வீட்டின் முன்பு 10 நாட்களும் தொடர்ந்து பூக்களினாலான கோலங்கள் இட்டு ஆடிப்பாடி மகிழ்வர். நடைபெறும் திருவிழாவில், ஒவ்வொரு நாளுக்கும் தனித்தனி பெயர் கொடுத்துக் கொண்டாடுகிறார்கள். ஓணம் பண்டிகையின் முதல் நாள் அத்தம், இரண்டாம் நாள் சித்திரா, மூன்றாம் நாள் சுவாதி என்றும் அழைக்கப்படும்.
அன்று மக்கள் ஒருவருக்கொருவர் பரிசுகள் அளித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர். நான்காம் நாளான விசாகத்தில், ஒன்பது சுவைகளில் உணவு தயார் செய்யப்படுகிறது. குறைந்த பட்சம் 64 வகையான உணவு வகை இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும். இவ்வுணவினை ஓண சாத்யா என அழைப்பர். ஐந்தாம் நாள் அனுஷம் (அனிளம்) எனப்படும்.
கேரள சகோதரர்களின், ஓண மகாபலி கதை; போதிக்கும்: மன்னிப்பின் உயர்வு! முற்க்காலத்தில் நம் முன்னோர்கள் மக்களுக்கு கல்வி புகட்டியதே தங்கள் எண்ணத்தில் உருவான கதைகள் மூலமாகவே, இது அவரவர் வாழ்விட வாழ்கால சூழ்நிலையை அடிப்படையாக கொண்டதாகவே இருந்தது; முக்கியமாக ஒளி இருள் வானம் பூமி இவைகளின் தோற்றம் மறைவு இதன் சுற்று வேகம் தூரம்: இவைகளின் இடம் வலம் போன்ற அளவீடுகளின் ஏற்ற தாழ்வுகளை உள்ளடக்கியதாகவே இருப்பது.
இங்கு இந்த கதைப்படி, தன்னை மூன்றடி குள்ளனாக்கி மகாபலியை தேடி வந்த வாமனனுக்கு, மகாபலியின் பேராசைக்கு ஒரு சீரிய பாடம் புகட்ட வேண்டும் என்ற எண்ணமே இருந்தது: ஏனெனில் அங்கே தங்கள் அறிவின் அளவுகோலால் அளந்தெடுக்க முடியாத செல்வத்தின் மதிப்பான பாதாள உலகும் பிம்ப மதிப்பாக இருந்ததை இவர்கள் அறிவர்.
எப்படியெனில் மகாபலியின் கமண்டலத்திருந்து வெளிப்பட்டு பரந்து விரிந்து கிடந்த தண்ணீரில், வாமனனின் உயர்ந்த காலின் பிம்பம் நிழலாக தெரிந்தது; ஆனால் அதை அளந்தெடுக்கும் மானிட ஞானத்தின் உயர்வளவு (சய்வின் உயரம் உயரத்தின் சாய்வு) என்ற கணித முறையை [1+1=2_1=1] அப்போது அவர்கள் அங்கே உணர்ந்தறிந்திருக்கவில்லை; அதனால்தான் வானத்திற்க்கு தூக்கிய வாமனின் காலால் பாதாள உலகை அளக்காமல்: மகாபலியின் மூலமாக மன்னிப்பின் பெருமையை மட்டும் இவ்வுலகிற்கு போதித்தது! மகாபலி என்ற மன்னர் கேரளத்தை சிறப்போடு ஆண்டு வந்தார்.
தானம், தருமங்கள் செய்வதில் சிறந்து விளங்கிய இந்த மன்னன் ஒருமுறை வேள்வி செய்யும்போது திருமால் வாமணனாக (குள்ள உருவில்) உருவெடுத்து வந்து மூன்றடி மண் கேட்டார்.

மகாபலியும் தந்தான். ஒரு அடியால் இந்தப் பூமியையும் மறு அடியால் விண்ணையும் அளந்த திருமாலுக்கு மூன்றாவது அடிக்காகத் தனது தலையையே கொடுத்தான் பலி மகாராஜா. அவனுக்கு முக்தி அளிக்க வேண்டி அவன் தலையில் கால் வைத்து அவனைப் பாதாள உலகிற்கு தள்ளினார் திருமால். தான் நாட்டுமக்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதால் வருடம் ஒருமுறை பாதாளத்திலிருந்து தனது நாட்டுக்கு வந்து மக்களைக் கண்டு மகிழும் வரம் வேண்டினான் மன்னன்.
அதன்படி, ஒவ்வொரு திருவோணத் திருநாள் அன்று மகாபலி பாதாள உலகிலிருந்து பூலோகத்திற்கு வருவதோடு, தங்களது வீடுகளுக்கும் வந்து செல்வதாகக் கேரள மக்கள் நம்புகிறார்கள் இதனை நினைவு கூர்ந்து, மகாபலியை மீண்டும் வரவேற்கும் வகையில் இந்தத் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

--

கட்டுரை -ரவீன் 

 

Tags :

Share via