நிர்வாண வீடியோக்களை காட்டி மிரட்டிய காதலன் கைது

by Staff / 22-02-2024 12:06:58pm
நிர்வாண வீடியோக்களை காட்டி மிரட்டிய காதலன் கைது

மதுரை ஆழ்வார்புரம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்ற இளைஞருடன் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி வந்துள்ளார். ஒருகட்டத்தில் அப்பெண் அருண் குமாருடன் நிர்வாண வீடியோ காலில் பேசியுள்ளார். இந்த நிலையில் இருவருக்கும் இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போது அருண்குமார் அப்பெண் பேசிய நிர்வாணமாக வீடியோ கால் பேசியதை பதிவு செய்து வைத்துக் கொண்டு, அதைக் காட்டி மிரட்டியுள்ளார். அப்பெண் அளித்த புகாரின் பேரில் அருண்குமாரை போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via