இன்று தைப்பூசத் திருவிழா

by Admin / 25-01-2024 10:54:56am
 இன்று தைப்பூசத் திருவிழா

தமிழ் கடவுளாம் முருகனுடைய அறுபடை வீடுகளில் இன்று தைப்பூசத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு கொண்டிருக்கின்றது ஆறுமுகனின் திருத்தலங்களில் கார்த்திகை விரதம் இருந்து கொண்டாடும் சஷ்டி விரதமும் தைப்பூசத்தில் கொண்டாடப்படும் விரதமும் பால் காவடி ,பன்னீர் காவடி, சந்தன காவடி, என்று அலகு புத்தியும் முருகனை வழிபடுவதற்கு மாலை அணிந்து..... நடைபாதை வழியாக பழனி திருச்செந்தூர் போன்ற குருஸ்தலங்களுக்கு பக்தர்கள் அணிவகுத்து செல்வது தம் பக்தியினுடைய மேலிட்டால் முருகா கந்தா கடம்பா கதிர்வேலா என்று அவர்கள் ஆக்ரோஷத்துடன் பக்தி மேலிட்டால்... உணர்ச்சி மேலிட்டால்... வழிபடுகின்ற ஒரு நிலை ஒரு காட்சியை இன்றைக்கு காண முடிகின்றது .மலேசியா ,சிங்கப்பூர் ,இலங்கை  ஆப்பிரிக்கா,லண்டன் போன்ற தமிழர்கள் அதிகமாக வசிக்கப்படுகின்ற உலக நாடுகளிலும் இன்று தைப்பூசம் மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது தமிழர்களுடைய முதன்மையான வழிபாடு களில் ஒன்றாகவே தைப்பூசம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

 

Tags :

Share via