எண்ணெய் இறக்குமதி அதிகரித்தது அமெரிக்கா

by Staff / 04-04-2022 11:09:37am
எண்ணெய் இறக்குமதி அதிகரித்தது அமெரிக்கா

ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதியை அமெரிக்கா 43 விழுக்காடு அதிகரித்து உள்ளதாக ரஷ்ய  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைச்செயலாளர் பொருளாதார தடைகளை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு ஐரோப்பிய நாடுகளை அமெரிக்கா வலியுறுத்தியதாகதெரிவித்துள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி தொடர்ந்து வருவதோடு 43 விழுக்காடுகள் வரை அதிகரிக்கவும் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போது நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பீப்பாய்கள்  வரை ரஷ்யாவிடமிருந்து எண்ணை அமெரிக்க வாங்கி வருகிறது மேலும் அத்தியாவசிய பொருள்கள் என்ற பட்டியலில் ரஷ்யாவிடமிருந்து உரங்களையும் அமெரிக்க நிறுவனம் இறக்குமதி செய்ததாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்

 

Tags :

Share via