மாணவர்களின் மின்னணு சான்றிதழ்களை கல்லூரிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் - சி.பி.எஸ்.இ.

by Editor / 03-09-2022 09:21:19am
மாணவர்களின் மின்னணு சான்றிதழ்களை கல்லூரிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் - சி.பி.எஸ்.இ.

சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை 22ம் தேதி வெளியிடப்பட்டன. தேர்ச்சி பெற்ற மாணவர்கள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து வருகிறார்கள். சில பல்கலைக்கழகங்கள், மாணவர்களிடம் அச்சிடப்பட்ட, காகித வடிவ மாற்று சான்றிதழ்களை சமர்ப்பிக்குமாறு கேட்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கூறுகையில் பொதுவாக, அச்சிடப்பட்ட சான்றிதழ்களை மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. உடனடியாக வழங்கி விடும். இருப்பினும், மாணவர்களின் டிஜிலாக்கரில் இடம்பெற்றுள்ள மின்னணு வடிவிலான மதிப்பெண் மற்றும் தேர்ச்சி சான்றிதழ்கள், மாற்று சான்றிதழ் ஆகியவை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியின் மின்னணு கையெழுத்துடன் உள்ளன. அது சட்டரீதியாக செல்லும். எனவே அந்த மின்னணு சான்றிதழ்களை ஏற்றுக்கொள்ளுமாறு அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானிய குழு உத்தரவிட வேண்டும் என கூறினார்.

 

Tags :

Share via

More stories