ரூ.5 லட்சம் வரை விற்கப்பட்ட நீட் வினாத்தாள்?
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் CBI நடத்தி வரும் விசாரணையில், ராஜஸ்தானில் வினாத்தாள்கள் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டது அம்பலமாகியுள்ளது. குர்கானில் பிளஸ்-2 தேர்வில் 98% மதிப்பெண் பெற்று, தற்போது ஆயுர்வேத கல்லூரியில் பயின்று வரும் யாஷ் என்பவர், விகாஸ் பிஸ்வால் என்பவரிடம் இருந்து வினாத்தாளை பெற்றதாக கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளி அளவில் சிறந்த மாணவராக கருதப்பட்ட யாஷ், இந்த முறைகேட்டில் சிக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags :



















