இஸ்ரயேலில் சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது மூன்றுபேரை கோடாரியால் வெட்டிக்கொன்ற இரண்டு பாலஸ்தீனர்கள் கைது

by Staff / 09-05-2022 02:44:42pm
இஸ்ரயேலில் சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது மூன்றுபேரை கோடாரியால் வெட்டிக்கொன்ற இரண்டு பாலஸ்தீனர்கள் கைது


இஸ்ரயேலில் சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது மூன்றுபேரை கோடாரியால் வெட்டிக்கொன்ற இரண்டு பாலஸ்தீனர்களை போலீசார் கைது செய்தனர். வியாழக்கிழமை முதல் இரவு பகலாக 70 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற தேடுதல் வேட்டையில் வனப்பகுதியில் பதுங்கி இருந்த அந்த இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இஸ்ரேல் கடந்த சில வாரங்களாக பொதுமக்களை குறிவைத்து நிகழ்த்தப்பட்டு வரும் தாக்குதல் சம்பவங்களில் 3 போலீசார் உட்பட 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பதிலுக்கு இஸ்ரேல் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையின்போது ஏற்பட்ட மோதலில் பாலஸ்தீனர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர்.

 

Tags :

Share via

More stories