புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி..

by Staff / 31-12-2023 01:42:51pm
புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி..

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மலருகின்ற புத்தாண்டில்,
மக்களுடைய துன்பங்கள் விலகி இன்பங்கள் பெருகவும்; அனைவரது வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும், நோய் இல்லாத வாழ்வையும், குறைவில்லாத செல்வத்தையும் வழங்கும் ஆண்டாக அமையவும், எல்லாம் வல்ல இறைவனை மனதார பிரார்த்தித்து,புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர்,புரட்சித் தலைவி அம்மாஆகியோரது நல்வழியில்,மக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

 

Tags :

Share via