அமிதாப் பச்சனுக்கு வாழ்த்து சொன்ன ரஜினி.

by Staff / 11-10-2022 04:16:55pm
அமிதாப் பச்சனுக்கு வாழ்த்து சொன்ன ரஜினி.

இந்தி திரையுலகில் பிக் பி என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் அமிதாப் பச்சனின் 80-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தும் அமிதாப் பச்சனுக்கு தனது வாழ்த்துகளை இன்று தெரிவித்து உள்ளார். இதுபற்றி டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், லெஜண்ட்... எப்போதும் என்னை ஈர்த்தவர்களில் ஒருவர்... நம்முடைய பெருமைமிகு இந்திய திரை துறையில், உண்மையில் வியப்பை ஏற்படுத்தும் ஒரு நபர் மற்றும் சூப்பர் ஹீரோவின் 80-வது பிறந்த தினம்... என்னுடைய அன்பிற்குரிய மற்றும் அதிக மதிப்புக்குரிய அமிதாப்ஜி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்... எப்போதும் அவருக்கு எனது அளவற்ற அன்பு மற்றும் மனப்பூர்வ வாழ்த்துகள் இருக்கும் என தெரிவித்து உள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo