50 பேரிடம் ரூ. 50 இலட்சம் மோசடி

by Staff / 19-02-2025 01:44:56pm
 50 பேரிடம் ரூ. 50 இலட்சம் மோசடி

திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 50 பேர் மொத்தமாக ரூ. 50 இலட்சம் பணத்தை இழந்துள்ளனர்.இதில் இல்லத்தரசிகள், சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வழியின்றி வீட்டில் இருப்போரை குறிவைத்து நுதன மோசடி நடைபெற்றுள்ளது. இன்றளவில் சமூக வலைத்தளங்களில் வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் அதிக நேரத்தை செலவிட தொடங்கியுள்ளார்கள். இவர்களில் விபரமானவர்கள், அதனை தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு சுயதொழிலில் ஈடுபட்டு முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். இதனிடையே, சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வீட்டில் இருந்த இல்லத்தரசிகள், பெண்களை குறிவைத்து மோசடி நடைபெற்றுள்ளது. 

இந்த மோசடி குறித்த விளம்பரங்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிரப்பட்டுள்ளன. இதனை நம்பிய பெண்களிடம் வீட்டில் இருந்தபடி வேலை, குறைந்த பணம் முதலீடு, அதிக இலாபம் என விளம்பரத்தை நம்பி 50 க்கும் மேற்பட்ட பெண்கள் ரூ. 50 இலட்சம் அளவில் முதலீடு செய்து பணத்தை இழந்துள்ளனர். மர்ம நபர்கள் கூறும் வங்கிக்கணக்கில் முதலீடு செய்து பணம் திரும்பி அனுப்பப்படுவது போல நடிக்கும் கும்பல், பின் தலைமறைவாகிறது. ஒருசிலர் ஏமாற்றம் அவமானம் என புகார் அளிப்பதில்லை. இதனிடையே, கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மட்டும் திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 50 பேர் மொத்தமாக ரூ. 50 இலட்சம் பணத்தை இழந்துள்ளனர். இதில் ஒருசிலரின் வங்கிக்கணக்கு பணம் அவர்களால் எடுக்க இயலாத வகையில் முடக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via