வி.சி.க.பிரமுகர் கொலை பாஜக பிரமுகர் உள்ளிட்ட 9 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.

by Editor / 07-03-2023 09:07:47am
 வி.சி.க.பிரமுகர் கொலை பாஜக பிரமுகர் உள்ளிட்ட 9 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.

திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கவியரசன் கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி உள்ள காளிதாஸ் என்கிற பாஜக பிரமுகர் உள்ளிட்ட 9 பேர் மீது திருவாரூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் பரிந்துரையின் பெயரில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
 

 

Tags :

Share via