அண்ணாமலையின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற சட்டமன்ற உறுப்பினர் உட்பட 16காங்கிரசாரை போலீசார் கைது

by Staff / 11-07-2024 03:14:01pm
அண்ணாமலையின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற சட்டமன்ற உறுப்பினர் உட்பட 16காங்கிரசாரை போலீசார் கைது

தென்காசியில் அண்ணாமலையின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற சட்டமன்ற உறுப்பினர் உட்பட 16காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர்.காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வ பெருந்தகையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அவதூறாக பேசி வருவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டை தெரிவித்து வந்தனர். இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் அண்ணாமலையை கண்டித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பாக காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவரும், தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான பழனி நாடார் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது அண்ணாமலையை கண்டித்து கோஷங்கள் எழுப்பிய நிலையில் அண்ணாமலையின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் நாகசங்கர் தலைமையிலான காவல்துறையினர் அண்ணாமலையின் உருவ பொம்மையை கைப்பற்றி அதனை எரிக்க முயன்ற எம்.எல்.ஏ தலைமையிலான16 காங்கிரஸ் கட்சியினரை கைது செய்தனர். இந்த சம்பவம் தென்காசியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது

 

Tags :

Share via

More stories

Logo