பாகிஸ்தானில் 86 பேர் பலி, 151 பேர் காயம்

by Staff / 11-07-2023 11:55:21am
பாகிஸ்தானில் 86 பேர் பலி, 151 பேர் காயம் பாகிஸ்தானில் கடந்த ஜூன் 25 முதல் சமீபத்தில் பெய்த பருவமழையால் 86 பேர் உயிரிழந்துள்ளனர் இதில் 151 பேர் காயமடைந்துள்ளதாக பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ARY நியூஸ் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை (NDMA) மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தானில் பெய்த கனமழையில் 6 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 9 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதுவரை, 86 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதில் 16 பெண்கள் மற்றும் 37 குழந்தைகள் அடங்குவார்கள். தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்கப்பட்டு வருகிறது.<br /> &nbsp;
 

Tags :

Share via

More stories