காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் நிறைவு.! வெற்றி யாருக்கு..

by Staff / 17-10-2022 05:23:00pm
காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் நிறைவு.! வெற்றி யாருக்கு..

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குபதிவு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வாக்களித்தனர். இந்நிலையில், கார்கே அல்லது சசி தரூர் என்ற இருவரில் யார் அடுத்த தலைவர் என்ற போட்டிக்கான வாக்கு பதிவு நிறைவடைந்து உள்ளது. அக்டோபர் 19-ந்தேதி (நாளை மறுநாள்) வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தலில் வெற்றி பெற்றவர் யாரென்ற முடிவுகள் அறிவிக்கப்படும்.

 

Tags :

Share via