பனைத் தொழிலாளியை துப்பாக்கியால் சுட்ட உதவி ஆய்வாள ர்பணியிடை நீக்கம்

by Admin / 09-04-2026 07:40:11am
பனைத் தொழிலாளியை துப்பாக்கியால்  சுட்ட உதவி ஆய்வாள ர்பணியிடை நீக்கம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மருதமுத்தூர் பகுதியில் சட்டவிரோதமாக கள் இறக்கப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் உதவி காவல் ஆய்வாளர் இசக்கி ராஜா தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். விசாரணையின் போது வாக்குவாதம் மற்றும் கைகலப்பு ஏற்பட்டது. இதில் பனைத் தொழிலாளியான மணிகண்டன் என்பவரை உதவி ஆய்வாளர் தனது கை துப்பாக்கியால் இரண்டு கால்களிலும் சுட்டார். மணிகண்டன் தன்னை தடியால் தாக்கியதால் தற்காப்புக்காக சுட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது .ஆனால், போலீசார் மணிகண்டனை அவமதித்ததாகவும் அவர் மீது அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் அவரது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்சி போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களின் போராட்டத்தை தொடர்ந்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.தற்போது மணிகண்டன் மற்றும் காயமடைந்த உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா ஆகிய இருவரும் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பனைத் தொழிலாளியை துப்பாக்கியால்  சுட்ட உதவி ஆய்வாள ர்பணியிடை நீக்கம்
 

Tags :

Share via

More stories

Logo