by Staff /
11-07-2023
11:49:41am
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு நியாய விலைக் கடைகளில் முன்கூட்டியே பயனாளர்களுக்கு டோக்கன் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் இந்த திட்டம் தொடங்க உள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்துவதற்கான விண்ணப்பங்கள் பெறுவதற்கான பயிற்சிக் கூட்டத்தை நடத்த அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. பள்ளிகள், சமுதாய நலக் கூடங்கள் ஆகியவற்றில் இந்த விண்ணப்பங்களைப் பெறுவதற்கான பணி நடைபெற உள்ளது. அரசு அறிவித்த பின்னர், குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் முன்கூட்டியே வழங்கப்பட்டு அதனடிப்படையில் விண்ணப்பங்கள் பெறப்படும் என்று கூறப்படுகிறது.<br />
Tags :
Share via