ரூ. 88. 40 லட்சம் மோசடி பெண் கைது

ராமாபுரம், பூத்தப்பேடு, அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் கவுதமன் (வயது 35). இவருக்கு அம்பத்துார், கள்ளி குப்பத்தைச் சேர்ந்த நித்யா (வயது 43) என்பவர் அறிமுகமாகி உள்ளார். அவர், காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.அதற்கு முன்பணமாக 85, 000 ரூபாய் செலுத்த வேண்டும் எனக்கூறி பணத்தை பெற்றுள்ளார். இவரை போல், 103 பேரிடம் 88. 40 லட்சம் பெற்று, போட்டோ, கைரேகை, கண்விழி அடையாளங்களை பதிவு செய்து, போலி அரசு முத்திரையுடன், போலியான ஒப்புகை சீட்டு கொடுத்து ஏமாற்றியுள்ளார்.இது குறித்து, கவுதமன் கடந்த 2018ல் மத்திய குற்றப்பிரிவில் அளித்த புகாரின்படி, நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான நித்யாவை, தனிப்படை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.
Tags :